December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய தூதர் ஹெய்ட்டியில் தொடர்ந்து தங்கி இருப்பார்?

வன்முறை அதிகரித்து வரும் நிலையில் ஹெய்ட்டியில் கனடாவின் தூதர் தொடர்ந்து தங்கி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த தகவலை வெளியிட்டார்.

ஹெய்ட்டிக்கான கனடிய தூதர் André François Giroux தொடர்ந்து அங்கு தங்கி இருப்பார் என அமைச்சர் Melanie Joly சனிக்கிழமை (23) தெரிவித்தார்.

ஹெய்ட்டியில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் கனடிய தூதரகம் மூடப்படுமா என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது உலகிற்கு கனடா தெரிவிக்கும் ஒரு ஒரு முக்கியமான செய்தியாகும் எனவும் அவர் கூறினார்.

கனடாவின் உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவின் உறுப்பினர்கள் ஹைட்டியின் தலைநகரில்  உள்ள தூதரகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சரின் இந்த கருத்து வெளியானது.

“தற்செயல் திட்டமிடலுக்கு” உதவ இராணுவ உறுப்பினர்கள் தற்போது கனடிய தூதரகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது

ஆனாலும் மேலதிக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது ஹெய்ட்டியில் 3,039 கனடியர்கள் வெளிநாடுகளில் உள்ள கனடியர்களின் பதிவு சேவையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் போர் நிறுத்தம் அவசியம்: கனடிய பிரதமர்

Gaya Raja

செவ்வாய்க்கிழமை முதல் Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment