தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவுகள் Ontarioவில் இரட்டிப்பாகியுள்ளன!

Ontarioவில் COVID தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் இரட்டிப்பாகியுள்ளது.

புதன்கிழமை Ontario மாகாணம் அத்தியாவசியமற்ற சேவைகளைப் பெறுவதற்கு தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டமொன்றை அறிவித்தது.

இந்த நிலையில் தடுப்பூசி பெற விரும்புபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் Christine Elliott தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை Ontarioவில் மொத்தம் 3,479 முன்பதிவுகள் தடுப்பூசிக்காக பதிவாகின.

இந்த எண்ணிக்கை புதன்கிழமை, 7,125ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது முதலாவது தடுப்பூசி பெறுவதற்கு முன் பதிவை மேற்கொண்டுள்ளனர்.

Ontario மாகாணத்தில் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment