தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு எதிராக தொடரும் அதிருப்தி!

கனேடியத் தமிழர் கூட்டு நடத்திய மக்கள் சந்திப்பில் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை (24) தமிழிசை கலா மன்றத்தில் இந்த மக்கள் சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது.

கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளாக அபிமன்யு சிங்கம், நீதன் சான், லஷ்மி வாசன், மரியோ புஷ்பரட்ணம், பிரணவஸ்ரீ ஐயாத்துரை, ஆரணி முருகானந்தன் ஆகியோர் இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்ததுடன், மக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

சுயாதீன ஊடகவியலாளர் உதயன் எஸ்.பிள்ளை இந்த மக்கள் சந்திப்பை வழிநடத்தினார்.

Scarborough Southwest நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் கலந்து கொண்டு இமாலய பிரகடனத்திற்கு எதிரான தனது கருத்தை பதிவு செய்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் இமாலய பிரகடனம் குறித்த தமது அதிருப்திகளை வெளியிட்டதுடன், கனடிய தமிழர் பேரவையின் அண்மைய கால நடவடிக்கை குறித்த விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

Related posts

அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடா தயார் பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் பெரும் சேவை இடையூறுகளை ஏற்படுத்தும்

Monkeypox காய்ச்சலையும் அவற்றின் பரவும் தொடர்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது

Leave a Comment