தேசியம்
செய்திகள்

Ontario முன்னாள் சட்டமா அதிபர் மரணம்

Ontario மாகாண முன்னாள் சட்டமா அதிபர் Roy McMurtry காலமானார்.

Roy McMurtry தனது 91 வது வயதில் காலமானார்.

17 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த அவர் 1975ஆம் ஆண்டு மாகாணசபைக்கு தெரிவானார்.

முதல்வர் Bill Davis அரசில், அவர் மாகாணத்தின் சட்டமா அதிபராக 1985 வரை பணியாற்றினார்.

தனது காலத்தில் மாகாண நீதி அமைப்பில் சீர்திருத்தங்களை Roy McMurtry மேற்பார்வையிட்டார்.

நீதிமன்றத்தில் இரு மொழியை ஒருங்கிணைத்தல், குடும்பச் சட்ட சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்ட சட்டமூலங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

1985 முதல் 1988 வரை, இங்கிலாந்துக்கான கனடாவின் உயர் ஆணையராக Roy McMurtry பதவி வகித்தார்.

அவர் 1991 இல் Ontario உயர் நீதிமன்றத்தின் இணை தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1994ல் Roy McMurtry அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

1996 இல் அவர் Ontarioவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Roy McMurtry 2007 வரை இந்த பதவியை வகித்தார்.

Related posts

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan

கனடிய தேசிய விமி நினைவகம் நாசமாக்கப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment