தேசியம்
செய்திகள்

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Carbon வரி உயர்வு குறித்த அவசர நாடாளுமன்ற விவாதம் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்

April 1ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள Carbon வரி உயர்வை எதிர்க்கும் அவசர நாடாளுமன்ற விவாதத்திற்கு Conservative தலைவர் Pierre Poilievre அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனாலும் இந்த கோரிக்கை அவசர விவாதத்தைத் தூண்டுவதற்கு, நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டில் உள்ள தேவைகளை இந்த கோரிக்கை பூர்த்தி செய்யவில்லை என சபாநாயகர் Greg Fergus கூறினார்.

Carbon வரி உயர்வை ஏழு மாகாண முதல்வர்கள் எதிர்த்துள்ளனர்.

Alberta, Saskatchewan, Ontario, New Brunswick, Nova Scotia, Prince Edward Island, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் Carbon வரி அதிகரிப்பை கைவிடுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.

Related posts

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் பலி

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment