தேசியம்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Ottawaவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற உள்ளது.

கனடா பௌத்த பேரவை இந்த தகவலை வெளியிட்டது.

தர்ஷனி பண்டாரநாயக்கா, அவரது நான்கு பிள்ளைகள், குடும்ப நண்பரான காமினி அமரகோன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் Ottawa ஒட்டாவா மாநாட்டு நிலையத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான காமினி அமரகோன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

சர்வமத பிரார்த்தனைகளுடன் இந்த இறுதிச் சடங்கு நடைபெறும் என கனடா பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயதான Febrio De-Zoysa கடந்த வாரம் புதன்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

Quebec மாகாணத்தின் அடித்தளம் பிரெஞ்சு மொழி: சட்டமன்ற ஆரம்ப உரையில் முதல்வர் Legault

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment