தேசியம்
செய்திகள்

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16) நடைபெறுகிறது.

தமிழ் சமூக மையக் குழு இந்த பொதுக் கூட்டத்தை நடத்துகிறது.

புதிய தகவல்களை வழங்குவதற்காகவும்,  புதிய திட்ட வடிவமைப்புகள், சமீபத்திய கட்டுமான காலக்கெடு, நிதி திரட்டும் திட்டங்கள் குறித்த சமூகத்தின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கு இந்த தமிழ் சமூக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

March 16 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் Scarborough Civic Centreரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் 2025 அம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் சமூக மைய புதிய பணிப்பாளர் சபை அண்மையில் அறிவித்தது.

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான  செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன.

Toronto நகர சபை 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான காணியை தமிழ்ச் சமூக மைய செயற்றிட்டத்திற்கான நீண்டகாலக் குத்தகையாக வருடமொன்றுக்கு 1 டொலர், அதற்கான வரி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளது.

311 Staines வீதியில் அமைந்துள்ள நிலத்தில் இந்த தமிழ் சமூக மையம் அமையவுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முதல் தடவையாக1,800க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

அடுத்த கல்வியாண்டு திட்டங்களை அறிவித்த Ontario மாகாண அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment