ஹெய்ட்டியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் கனடாவின் ஐ.நா. தூதர் கலந்து கொள்ள உள்ளார்.
திங்கட்கிழமை (11) நடைபெறும் ஹெய்ட்டி குறித்த அவசர கூட்டத்திற்கு ஒரு அதிகாரியை அனுப்ப கனடா திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடிய தூதுவர் Bob Rae இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
கனடிய வெளியுறவுத்துறை அமைச்சரின் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியது.
ஹெய்ட்டியில் அதிகரித்து வரும் குழு வன்முறை குறித்து விவாதிக்க கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், ஐ.நா. தலைவர்களுக்கு கரீபியன் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஹெய்ட்டியில் ஆயுத கும்பல்களால் நடத்தப்படும் அத்துமீறல்களை கனடா வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த வன்முறைகளை கண்டிப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly வெள்ளிக்கிழமை (08) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.