தேசியம்
செய்திகள்

Brian Mulroneyயின் இறுதிச்சடங்கு Montrealலில் March மாதம் 23ஆம் திகதி

முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் இறுதிச்சடங்கு Montrealலில் நடைபெறவுள்ளது.

March மாதம் 23ஆம் திகதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney கடந்த வாரம் காலமானார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் March மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

அவரது பூதவுடல் இறுதி சடங்கிற்கு முன்னர் Ottawaவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

84 வயதில் காலமான முன்னாள் பிரதமரின் இறுதி சடங்கு அரசு முறையில் நடைபெற உள்ளது.

Progressive Conservative கட்சியின் தலைவராக Brian Mulroney, 1984 முதல் 1993 வரை ஒன்பது வருடங்கள் கனடிய பிரதமராக பதவி வகித்தார்.

Related posts

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலக மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் முடிவு!

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment