December 12, 2024
தேசியம்
செய்திகள்

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

மேகப் புண் – syphilis – ஆபத்துகள் குறித்து கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளார்.

2018 முதல் நாடளாவிய ரீதியில் மேகப் புண் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளதாக Dr. Theresa Tam புதன்கிழமை
(14) கூறினார்.

கனடாவில் மேகப் புண்ணால் ஏற்படும் கடுமையான உடல் நல அபாயம் குறித்து எச்சரிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனை தடுப்பதற்கு சோதனையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகின்றார்.

பல நாடுகளைப் போலவே கனடாவும் மேகப் புண் பரவலில் ஆபத்தான அதிகரிப்பை சந்தித்துள்ளதாக Dr. Theresa Tam தெரிவித்தார்.

மேகப் புண் – syphilis –  பாலியல் ரீதியாக பரவும் நுண்ணுயிரியல் தொற்று ஆகும்.

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இதயம், மூளை, இரத்த நாளங்கள், நரம்பு மண்டல பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆனாலும் சரியான நேரத்தில் நோயறிதலுடன், பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் இதனை குணப்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில்  13,953 தொற்று மேகப் புண் – infectious syphilis – 117 பிறவி மேகப் புண் – congenital syphilis  – சம்பவங்கள் பதிவானது .

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது.

Related posts

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

வெளியானது Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Gaya Raja

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment