பணி நீக்கங்களுக்கு மத்தியில் Bell ஊடக வலையமைப்பு 45 வானொலி நிலையங்களை விற்பனை செய்கிறது.
Bell ஊடக வலையமைப்பு அதன் 103 பிராந்திய வானொலி நிலையங்களில் 45 வானொலி நிலையங்களை விற்பனை செய்கிறது
Bell துணை நிறுவனத்தில் பத்திரிக்கையாளர்கள், பிற தொழிலாளர்கள் உட்பட அதன் ஒன்பது சதவீத பணியாளர்களை அது குறைக்கிறது.
விற்பனை செய்யப்படும் நிலையங்கள் British Columbia, Ontario, Quebec, Atlantic கனடாவில் உள்ளன.
தமது நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் 4,800 தொழில்கள் குறைக்கப்படும் என Bell தலைமை நிர்வாகி Mirko Bibic வியாழக்கிழமை (08) வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இலையுதிர் காலத்தில் இருந்து ஊடக தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய பணி நீக்கத்தை இது குறிக்கிறது.
கடந்த இலையுதிர் காலத்தில் ஆறு சதவீத Bell ஊடக வேலைகள் தொழில்கள் குறைக்கப்பட்டதுடன் ஒன்பது வானொலி நிலையங்கள் மூடப்பட்டன அல்லது விற்கப்பட்டன.