தேசியம்
செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை கனடா ஆதரிக்கவில்லை: பிரதமர் Justin Trudeau

உலக நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கை கனடா ஆதரிக்கவில்லை என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தை ஆதரிக்கிறது என கூறிய பிரதமர் ஆனாலும் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கின் முன்மாதிரியை கனடா ஆதரிக்கவில்லை என கூறினார்.

காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு, அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் மீதான முற்றுகை “இனப்படுகொலை குணாம்சங்களை” கொண்டது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வாதிட்டது.

இந்த விடயத்தில் கனடாவின் நிலைப்பாடு குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என Justin Trudeau தெரிவித்துள்ளார்.

Related posts

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment