விமான நிலையத்தில் தரித்த நின்ற Air Canada விமான கதவை திறந்த பயணி தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
Toronto முதல் Dubai வரை பயணிக்க தயாராக இருந்த விமானத்தில் இந்த சம்பவம் Toronto Pearson விமான நிலையத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக Air Canada விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏறிய ஒரு பயணி தனது இருக்கைக்கு செல்லாமல், விமானத்தின் எதிர் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்துள்ளார்.
விழுந்து பயணி காயமடைந்ததாக Air Canada தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அவசர உதவி சேவையாளர்களும் காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர்.
குறித்த பயணி ஏன் கதவைத் திறந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
319 பயணிகளை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்ட விமான பயணம் தாமதமானது.