அமெரிக்காவின் New York நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கனேடியர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்
கடந்த வெள்ளிக்கிழமை (05) நிகழ்ந்த இந்த விபத்தின் போது மொத்தம் 23 பேர் பேருந்தில் பயணித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து Montreal நகரில் இருந்து New York நகருக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காயமடைந்த பயணிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.