தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் இலங்கதாஸ் பத்மநாதன் இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம் என கனடிய தமிழர் பேரவை – CTC – அறிவித்துள்ளது.

இது ஒன்றும் கொண்டாடப்பட  வேண்டிய விடயமல்ல.

CTC நிர்வாகம் தொடர்ச்சியாக எடுக்கும் தவறான முடிவுகளின் அறுவடைதான் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.

தவிரவும் கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு தமிழின படுகொலை குற்றவாளியை சந்தித்து – அதனை இன்று வரை நியாயப்படுத்தி வரும் CTC நடத்தும் நிகழ்வில் எவ்வாறு கனடிய அரசியல்வாதிகள் பங்கேற்பார்கள்?

மகிந்த ராஜபக்ச உடனான சந்திப்பையும், அவருக்கான அங்கீகாரத்தையும் ஒரு “துரோகம்” என கனடாவில் இருந்து பலரும் CTC மீது தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருப்பதை CTC நிர்வாகம் ஒன்றும் அறியாமல் இல்லை.

கனடிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண பிரதி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விஜய் தணிகாசலம், Ontario மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி,  Brampton நகர முதல்வர் Patrick Brown, Toronto கல்விச் சபை உறுப்பினர் நீதன் சான், Toronto கல்விச் சபை உறுப்பினர் யாழினி ராஜகுலசிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி, CTC ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் இயக்குனருமான அபிமன்யு சிங்கம், கனடிய தமிழர் தேசிய அவையின் தலைவர் ஸ்ரீ ரஞ்சன், தமிழர் உரிமைக் குழுவின் பொதுச் செயலாளர் கற்பனா நாகேந்திரன் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது.

பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்கும் அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் பிரதான காரணி, இம்முறை மேடையேற்றி அழகு பார்ப்பதற்கு கனடிய அரசியல்வாதிகள் வருகை இருக்காது என்பதுதான். அதை மூடி மறைப்பதற்கு தான் “கனடியத் தமிழர் பேரவையின் மீதும், அதன் அலுவலகர்கள் மீதும் கடந்த பல வாரங்களாக நடைபெற்று வருகின்ற நியாயமற்ற, தேவையற்ற தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என CTC நிர்வாகம் தனது அண்மைய அறிக்கையில் பூசி மெழுகு கின்றது.

இன்றைய நிலைக்கு காரணம் நீங்கள் மட்டும் தான்.

ஆனாலும் இன்று வரை CTC தனது தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரவில்லை. இந்த முடிவுக்கு காரணமானவர்கள் தான் இப்போதும் தொடர்ந்து “கனடிய தமிழர்களின் பிரதிநிதிகள்” என்ற போர்வையில் முடிவுகளை எடுக்கின்றனர்.

CTC சமூகத்தில் எஞ்சியிருக்கும் நம்பகத் தன்மையை காப்பாற்ற விரும்பினால், இந்த துரோகத்தை உடனடியாக சரி செய்ய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

1)  பொது வெளியில் மக்கள்/ஊடகர் சந்திப்பொன்றை நடத்தி; இந்த முடிவு யாரால் ஏன் எடுக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்த வேண்டும்

2) இந்த முடிவுக்கு CTC கனடிய தமிழர்களிடமும் கனடிய அரசாங்கத்திடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

3)  கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட  தமிழின படுகொலையாளரை அங்கீகரித்த தவறுக்கு பொறுப்பேற்று கனடிய தமிழர் பேரவையின் தலைவர் ரவீனா ராஜசிங்கம், நிர்வாக இயக்குனர் டான்டன் துரைராஜா, முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் உட்பட நிர்வாக,  இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டும்.

தவிரவும் இவர்கள் அனைவரும் கனடிய தமிழர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக விலத்தி இருப்பதே சமூகத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்க முடியும்.

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன் நகர வேண்டும். கனடிய தமிழர் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

தைப் பொங்கல் விருந்து நிகழ்வு ஒத்திவைப்பு ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி. கனடிய தமிழர்கள் எதிர்பார்ப்பது ஒட்டுமொத்த கனடிய தமிழர்களின் அமைப்பான CTC வெளிப்படையாகவும் ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை எதிர்பார்ப்புதான்.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

வேட்பாளர்கள் தேவை! Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட விருப்பமா?

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

இன அழிப்புக்கு எதிரான கனடாவின் நிலைப்பாடு!

Gaya Raja

Leave a Comment