தேசியம்
செய்திகள்

Assembly of First Nations புதிய தலைவர் தெரிவு

Assembly of First Nations புதிய தலைவராக Cindy Woodhouse வியாழக்கிழமை (07) தெரிவானார்.

புதன்கிழமை (06) பின்னிரவு வரை நீடித்த ஆறு சுற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் அவரது நெருங்கிய போட்டியாளர் David Pratt, தோல்வியை ஒப்புக் கொண்டார்.

புதன்கிழமை நடைபெற்ற ஆறு தனி சுற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் Cindy Woodhouse பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 50.8 சதவீதத்தை பெற்றார்.

இது வெற்றிக்கு தேவையான 60 சதவீத எண்ணிக்கைக்கு குறைவானதாகும்.

இந்த நிலையில் வியாழன் காலை ஏழாவது சுற்று வாக்களிப்புக்கு முன்னர் இரண்டாவது அதி கூடிய வாக்குகளை பெற்ற David Pratt தோல்வியை ஒப்புக் கொண்டார்.

Cindy Woodhouse, கனடா முழுவதும் 600க்கும் மேற்பட்ட முதற்குடி தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்பின் Manitoba பிராந்திய தலைவராக இருந்தவராவார்.

Assembly of First Nations முன்னாள் தலைவர் RoseAnne Archibald இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

RoseAnne Archibald நடத்தை குறித்து ஐந்து ஊழியர்களின் புகார்கள் மீதான விசாரணையின் பின்னர் அவர் பதவி விலக்கப்பட்டார்.

இதன் பின்னர் Joanna Bernard இடைக்கால தலைவராக பணியாற்றி வந்தார்.

Related posts

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment