February 22, 2025
தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Toronto காவல்துறையினரின் வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Project Safari என பெயரிடப்பட்ட இந்த விசாரணையில் சந்தேக நபர்கள் மீது 70 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகின.

Toronto  நகரம் முழுவதும் ஏராளமான வாகன திருட்டுகளுக்கு காரணமான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய இந்த விசாரணை இந்த வருடம் February மாதம் ஆரம்பமானது.

இதில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை Toronto காவல்துறையினர் புதன்கிழமை (06) வெளியிட்டனர்.

கீர்த்தன் மங்களேஸ்வரன் (29 வயது)
கோபி யோகராஜா (2 வயது)
மிலோஷா ஆரியரத்தினம் (29 வயது)
கஜன் யோகநாயகம் (32 வயது)
Howard Lee (25 வயது)
Doneika Jackson (38 வயது)
Andrea Fernandes (30 வயது)

ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இந்த விசாரணையில் மொத்தத்தில், $1.5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டது.

இவர்களுக்கு எதிரான குயிற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்ய தயாராகும் Doug Ford?

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை முன்னாள் தலைவர் PC வேட்பாளரானார்

Lankathas Pathmanathan

Leave a Comment