December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Ontarioவில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் November மாத ஆரம்பத்தில் Ontario முழுவதும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கலாம் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார ஆரம்பத்தில் பெல்ஜியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொராக்கோவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த நிலையில், சந்தேகநபர் Ontarioவில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளவில்லை.

Related posts

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

Edmonton விபத்தில் 2 பேர் மரணம் – 6 பேர் காயம்

Lankathas Pathmanathan

அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்ற நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்!

Gaya Raja

Leave a Comment