December 12, 2024
தேசியம்
செய்திகள்

988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவது அறிமுகம்

988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவதும் பாவனைக்கு வந்துள்ளது.

911 என்ற அவசர உதவி இலக்கத்தை போல 988 என்ற இந்த புதிய சேவை தற்கொலைத் தடுப்பு சேவையாளர்களுடன் பாவனையாளர்களை  இணைக்கும் என கூறப்படுகிறது.

இந்த இலக்கத்தை அழைப்பதன் மூலம் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தற்கொலைத் தடுப்பு சேவைகளை  பாவனையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

988 இன் குறிக்கோள் தற்கொலையைத் தடுப்பதாகும் என இந்த இலக்க சேவைக்கான  தலைமை மருத்துவ அதிகாரி Dr. Allison Crawford தெரிவித்தார்.

கனடாவின் ஒவ்வொரு மாகாணம், பிரதேசத்தில் உள்ளவர்கள் மனநல நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில்  உடனடியாக சேவையாளர்களுடன் இந்த மூன்று இலக்க எண்ணை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.

கனடாவில்  ஒவ்வொரு ஆண்டும் 4,500 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது

Related posts

New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Lankathas Pathmanathan

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan

Leave a Comment