November 16, 2025
தேசியம்
செய்திகள்

புதன்கிழமை மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்வு

கனடாவின் மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை எதிர்வரும் புதன்கிழமை (25) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் கால் சதவீத வட்டி விகித உயர்வை கணித்துள்ளனர்.

இது மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாக அதிகரிக்கிறது.

இதன் மூலம் 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகூடிய அளவுக்கு உயரும்.

மத்திய வங்கி கடந்த March மாதத்தில் இருந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.

பல தசாப்தங்களாக உயர்ந்த பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ச்சியாக ஏழு முறை மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

அதேவேளை கடந்த மாதம், வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

ஹரி ஆனந்தசங்கரியின் முடிவுக்கு கனடிய பிரதமர் பாராட்டு!

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja

Leave a Comment