வரவிருக்கும் அடமான கடன் புதுப்பித்தல்கள் காரணமாக, கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது
கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த தகவலை தெரிவித்தார்.
கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதமாக வைத்திருக்க அண்மையில் முடிவு செய்தது.
வரவிருக்கும் அடமான கடன் புதுப்பித்தல்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Tiff Macklem கூறினார்.
நாடு மந்த நிலைக்குள் செல்வதை மத்திய வங்கி விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆனாலும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட சில அதிகரிப்புகள் அவசியம் எனவும் அவர் கூறினார்
அதிக வட்டி விகிதங்கள் செலவினங்களை பாதிப்பதனால் பொருளாதாரம் இலேசான மந்தநிலையில் சிக்கியிருக்கலாம் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.