1,600 கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டினர் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
காசா மற்றும் West Bank பகுதியில் 452 கனேடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு சனிக்கிழமை (21) மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்ரேலில் 5,900 கனடியர்களும், லெபனானில் 16,481 பேரும் கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ஆறு கனேடியர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் இருவர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.