தேசியம்
செய்திகள்

இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க ஐந்து நாட்கள் அவகாசம்?

இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடாவுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குறைக்க இந்திய அரசாங்கம் October 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கியுள்ளது

இந்தியாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் திரும்ப அழைக்க வேண்டும் என இந்தியா கனடாவிடம் வலியுறுத்தியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இந்தியாவின் தலைநகர் புது டெல்லிக்கு வெளியே இந்தியாவில் பணிபுரியும் கனேடிய தூதர்களில் பெரும்பாலோர் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது

இந்தியாவில் உள்ள சில கனடிய இராஜதந்திரிகளுக்கு பல்வேறு சமூக ஊடக தளங்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு முன்னர் கூறியிருந்தது.

இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள கனடிய தூதரக பணியாளர்கள் எண்ணிக்கையை தற்காலிகமாக மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான ஆதாரங்கள்  உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது என நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் கனேடியர்களுக்கு விசா சேவை முடக்கியதுடன், கனேடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளது.

முன்னதாக கனடாவில் இருந்து முக்கிய இந்திய இராஜதந்திரி வெளியேற்றப்பட்டார்.

Related posts

Manitoba இடைத் தேர்தலில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

Toronto நகரின் புதிய முதல்வராக பதவியேற்ற Olivia Chow

Lankathas Pathmanathan

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment