February 21, 2025
தேசியம்
செய்திகள்

கனேடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றவியல் விசாரணை வலியுறுத்தல்

கனேடியர்  கொலையில் இந்திய அரசின் பங்கு குறித்த குற்றவியல் விசாரணையை கனடிய பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிளவு நாளாந்தம் விரிவடைந்து வருகிறது
கனேடியர்களுக்கு விசா சேவை முடக்கியதுடன், கனேடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இராஜதந்திர தகராறு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறினார்.

இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என கனடா அழைப்பு விடுத்துள்ளது.

Hardeep Singh Nijjarரின் மரணத்திற்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து கனடாவிடம் மிகவும் நம்பகமான உளவுத் தகவல் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் இந்த விடயத்தில் கனடாவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

COVID காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகும் கனேடிய தடகள நட்சத்திரம்

Lankathas Pathmanathan

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டது தவறு: Trudeau

Gaya Raja

Leave a Comment