தேசியம்
செய்திகள்

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

இந்தியாவின் ஒரு முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து  வெளியேற்றப்பட்டார்.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார்

கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த இராஜதந்திரியின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனத்தின்  கனேடிய நடவடிக்கைகளின் தலைவராக இருந்த Pavan Kumar Rai  கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையில் ஈடுபட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இந்தியா கனடாவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக Melanie Joly கூறினார்.

Related posts

புதிய ஆளுநர் நாயகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் பிரதமருக்கு வழங்கப்படும்!

Gaya Raja

முடிவுக்கு வரும் Ottawa நகரின் அவசரகால நிலை!

Gaya Raja

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment