தேசியம்
செய்திகள்

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் கனடிய பிரதமர் இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் Justin Trudeau இந்தியா பயணித்திருந்தார்.

இந்த மாநாட்டில் கனடிய பிரதமர் Justin Trudeau, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடினர்.

இந்த உரையாடலின் போது  கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டுகளை “தனிப்பட்ட முறையில், நேரடியாக” இந்திய பிரதமரிடம் முன்வைத்தாக Justin Trudeau திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

“கனேடிய மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்” என Justin Trudeau கூறினார்.

இந்த சந்திப்பில் இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்ததாக இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

Related posts

மூன்று விமானங்களில் உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர திட்டம்

Lankathas Pathmanathan

முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவுகள் Ontarioவில் இரட்டிப்பாகியுள்ளன!

Gaya Raja

Leave a Comment