தேசியம்
செய்திகள்

B.C. வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்!

British Colombia மாகாணத்தின் Prince George நகரில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய்கிழமை (22) காலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

கைவிடப்பட்ட கட்டிடத்தின் உள்ளே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக RCMP தெரிவித்தது.

இந்த வெடிப்பு காரணமாக கைவிடப்பட்ட கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது .

தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்தனர்.

இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர் உயர் மட்ட பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிப்பு சந்தேகத்திற்கிடமானதா அல்லது தற்செயலானதா என்பதை ஊகிக்க காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

Related posts

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் கனேடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan

இரண்டாவது இடைத் தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment