20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளக்குடியமர்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்தார்.
தலிபான்களின் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பெண் தலைவர்கள், மனித உரிமைப் பணியாளர்கள் நிருபர்கள் உட்பட 20 ஆயிரம் பேரை கனடா குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த நகர்வு கனேடிய அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆயிரக்கணக்கான மொழி பெயர்ப்பாளர்கள், தூதரக தொழிலாளர்களை வரவேற்கும் முந்தைய முயற்சியுடன் தொடர்புபடாதது எனவும் அமைச்சர் Mendicino தெரிவித்தார்.