September 26, 2023
தேசியம்
செய்திகள்

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு படைகளை அனுப்பவுள்ளது கனடா .

காபூலில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் தூதரகம் மூடப்படுவதற்கு முன்னர் வெளியேற்றப்படவுள்ளனர்.

தூதரகத்திலிருந்து கனேடியர்களை வெளியேற்ற கனடாவின் இராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக கனேடிய சிறப்புப் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

தூதரகத்தில் கனடாவுக்காக வேலை செய்த பல ஆப்கானியர்களும் அவர்களது குடும்பங்களும் கனேடியர்களுடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் கனேடிய வளாகத்திற்குள் உள்ளதாக தெரியவருகின்றது. கனேடிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளவர்களில் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

கனடா தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலைமையை கண்காணித்து வருவதாக உலகளாவிய விவகாரங்களுக்கான கனடாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கனேடிய தூதரகத்தின் பாதுகாப்பும் காபூலில் உள்ள கனேடிய பணியாளர்களின் பாதுகாப்பும் முன்னுரிமையாக உள்ளதாக கூறிய அவர், வெளிவிவகார அமைச்சர் Marc Garneau ஆப்கானிஸ்தானுக்கான கனேடிய தூதருடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 40,000 கனேடிய துருப்புக்கள் 13 வருடங்களாக NATO பணியின் ஒருபகுதியாக நிலை நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் கனேடியர்களுக்கு உதவிய ஆப்கானியர்களை கனடாவுக்கு அழைக்கும் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரை!

Gaya Raja

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

Leave a Comment

error: Alert: Content is protected !!