தேசியம்
செய்திகள்

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

British Colombia மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Saskatchewan மாகாணத்தின் McDougall Creek காட்டுத்தீ ஒரே இரவில் British Columbia மாகாணத்தின் Okanagan ஏரியைத் தாண்டிய நிலையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (18) நள்ளிரவு 1 மணிக்கு முன்னதாக, Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Kelowna நகரில் தீ பரவியதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.

“அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியமானது” என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Related posts

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

Lankathas Pathmanathan

Ontario மாகாண பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment