Ontario மாகாணத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வியாழக்கிழமை (27) நடைபெறுகிறது.
Torontoவில் Scarborough – Guildwood தொகுதியிலும், Ottawaவில் Kanata- Carleton தொகுதியிலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழனன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் Scarborough – Guildwood தொகுதியில் NDP சார்பில் தமிழ் வேட்பாளரான தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.
Ontario தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த இரண்டு Ontario இடைத்தேர்தல்களில் தகுதியான வாக்காளர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர்.
Kanata-Carleton தொகுதியில் 7.34 சதவீதம் வாக்குகளும், Scarborough-Guildwood தொகுதியில் 3.6 சதவீதம் வாக்குகளும் முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவாகியுள்ளன
இந்த இரண்டு தொகுதிகளிலும் வியாழனன்று வாக்களிப்பு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.
Kanata-Carleton தொகுதி கடந்த March மாதம் முதல் வெற்றிடமாக உள்ளது.
அந்த தொகுதியில் மாகாணசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த Merrilee Fullerton திடீரென தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.
Toronto நகர முதல்வர் இடை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது Scarborough-Guildwood தொகுதி மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகியிருந்தார்.