அடையாளம் காணப்படாத கல்லறைகள் இருக்கக் கூடியதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் தேடுதல் மேற்கொள்ள மேற்கு Manitoba முதற்குடியினர் சமூகம் (Pine Creek First Nation) முடிவு செய்துள்ளது.
ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (24) இந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சி பணி ஒரு மாத காலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ளதாக கூறப்படும் கல்லறைகள் குறித்து விசாரிக்க முதற்குடியினர் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதாக கடந்த இலையுதிர்காலத்தில் RCMP அறிவித்தது.