February 23, 2025
தேசியம்
செய்திகள்

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கனடியர் பிரித்தானியாவில் கைது

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கனடாவைச் சேர்ந்த ஒருவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் 28 வயதான கனேடியப் பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (18) நண்பகல் Heathrow விமான நிலையத்தில் கைது செய்தனர்.

கைதானவர் கனடாவிலிருந்து விமானத்தில் இங்கிலாந்து சென்றடைந்ததாக தெரியவருகிறது.

இவருடன் தொடர்புடைய விசாரணையில் மற்றொரு சந்தேக நபர் London நகரில் கைதானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கைதுகள் குறித்த விசாரணை தொடரும் நிலையில் இவர்கள் தொடர்புபட்டதாக கூறப்படும் பயங்கரவாதக் குழுவின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவானால் மாத்திரம் அவர்கள் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என காவல்துறையினர் கூறினர்.

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment