தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் ஆரம்பம்

Canada Dental Benefit எனப்படும் மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் சனிக்கிழமை (01) ஆரம்பிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் CRA இணைய கணக்கு மூலம் இந்த உதவி திட்டத்திற்கு சனிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் தகுதியான குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அடுத்த ஆண்டு பல் மருத்துவ சேவைகளுக்காக ஒரு குழந்தைக்கு 650 டொலர்கள் வரை பெறலாம்.

12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு கிடைக்கும் தொகை அவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை பொறுத்து மாறுபடும்.

October 2022 முதல், June 2023 வரையிலான முதல் தகுதிக் காலத்தில் 3 இலட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளனர் என Health கனடா தெரிவிக்கின்றது.

Related posts

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

Leave a Comment