கடந்த வாரம் Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை (15) பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் செவ்வாய்கிழமை (20) நேற்று சிகிச்சை பலனின்றி பலியானதாக RCMP புதன்கிழமை (21) அறிவித்தது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் ஒருவர் செவ்வாயன்று மரணமடைந்தார்.
இதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது.
இந்த விபத்து குறித்து RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.