கனடிய தமிழர் தனது மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 38 வயதான தீபா சீவரத்தினத்தின் மரண விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
கொலை செய்யப்பட்ட தீபா சீவரத்தினத்தின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் முதல் நிலைக் கொலையாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர் தனது மனைவியை கொலை செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயற்பட்டாரென வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளிக்கப்பட்டது.
இவரால் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட கொலையாளி Steadley Kerr முதல் நிலைக் குற்றவாளி எனவும், கொலை செய்தவருக்கு உதவிய Gary Samuel உடந்தை கொலைக் குற்றவாளி எனவும் தீர்ப்பழிக்கப்பட்டது.
11 வாரங்கள் தொடர்ந்த விசாரணையின் பின்னர் கடந்த வெள்ளியன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
தண்டனை தொடர்பான விசாரணை June மாதம் 28ஆம் திகதி நடைபெறும்.