December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் அதிக வாக்குகள் பதிவு

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல், முன்கூட்டிய வாக்களிப்பு காலத்தில் 12 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (08) ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (13) நிறைவடைந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நகர சபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இம்முறை முன்கூட்டிய வாக்களிப்பு காலத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இம்முறை 50 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் முன்கூட்டிய வாக்களிப்பு நேரத்தை உபயோகித்து வாக்களித்துள்ளனர்.

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Toronto நகரம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 1,445 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் .

இந்த தேர்தலில் இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related posts

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan

Ontarioவில் தொற்றின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment