மூன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து RCMP விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் Michael Chong, Erin O’Toole, புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenny Kwan ஆகியோருக்கு எதிரான வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து RCMP இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
செவ்வாய்க்கிழமை (13) காலை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது RCMPயின் பதில் ஆணையாளர் Mike Duheme விசாரணைகளை உறுதிப்படுத்தினார்.
வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஆணையாளர் கூறினார்.
கனடாவில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான 100க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை தொடரும் விசாரணைகளுக்கு மத்தியில் சீனாவினால் கனடாவில் இயக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் Mike Duheme கூறினார்.