தேசியம்
செய்திகள்

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு ?

தொடர் கொலையாளி Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino திங்கட்கிழமை (05) தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக, Ontarioவில் உள்ள இரண்டு அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த Paul Bernardo, கடந்த வாரம் Quebecகில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

Paul Bernardo இடமாற்றம் செய்யப்பட்டதை அதிர்ச்சியூட்டும் ஒரு விடயம் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கடந்த வெள்ளிக்கிழமை (02) வாரம் ஒரு அறிக்கையில் விபரித்திருந்தார்.

இந்த நிலையில் அதிகபட்ச Paul Bernardo பாதுகாப்பு சிறைக்கு திருப்பி அனுப்பப்படுவதை உறுதிப்படுத்துமாறு Conservative கட்சி வலியுறுத்துகின்றது.

இந்த முடிவை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என திங்கள் காலை Conservative தலைவர் Pierre Poilievreஅழைப்பு விடுத்திருந்தார்.

Paul Bernardo தொடர்ந்தும் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்படவேண்டும் என Ontario முதல்வர் Doug Ford திங்கட்கிழமை தெரிவித்தார்.

1990களின் ஆரம்பத்தில் 15 வயது Kristen French, 14 வயது Leslie Mahaffy ஆகிய இருவரை கடத்தி, கற்பழித்து, சித்திரவதை செய்து, கொலை செய்ததற்காக Paul Bernardoவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

British Colombiaவில் மீண்டும் அதிகரிக்கும் நாளாந்த COVID தொற்று எண்ணிக்கை!!

Gaya Raja

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment