February 22, 2025
தேசியம்
செய்திகள்

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும் அடங்குகின்றனர்

அவர்களில் 6 பேர் மீட்கப்பட்டனர்.

10 வயதுக்கு மேற்பட்ட நான்கு குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் சில மணிநேரங்களுக்குப் பின்னர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன.

30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தேடப்படுகின்றார்

பலியானவர்களின் அடையாளங்களை காவல்துறை வெளியிடவில்லை.

ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர்.

Related posts

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்கள் வெளியானது

Lankathas Pathmanathan

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan

Leave a Comment