தேசியம்
செய்திகள்

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

கடந்த இரண்டு மாதங்களில் கனடாவில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளது.

இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இணைய மேலும் 700 சர்வதேச தீயணைப்பு படையினர் கனடாவை வந்தடைய உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அடுத்த இரண்டு வாரங்களில் இவர்கள் கனடாவை வந்தடைய உள்ளனர்.

Albertaவில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட சர்வதேச தீயணைப்பு படையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 101 தீயணைப்பு படையினர் வெள்ளிக்கிழமை (02) அமெரிக்காவிலிருந்து கனடாவை வந்தடைந்துள்ளனர்.

மேற்கு கனடாவில் குளிர்ச்சியான வானிலையும், Nova Scotiaவில் மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் உதவும் என அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair வெள்ளியன்று தெரிவித்தார்.

ஆனாலும் கடுமையான தீ எச்சரிக்கைகள் நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு பெரும்பாலான மாகாணங்களில் தொடர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

எல்லைப் பணியாளர்கள் ;வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தம்!

Gaya Raja

COVID பரவலில் இருந்து பாதுகாப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment