December 12, 2024
தேசியம்
செய்திகள்

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Nova Scotiaவின் Halifax பகுதியில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ ஆரம்பித்த ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) அது அதிகரிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

837 hectare பரப்பளவில் ஏற்பட்ட தீயில் 50 சதவீதம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக Nova Scotia இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.

ஆனாலும் ஆபத்தான சூழ்நிலைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Halifaxசில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 30 C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nova Scotia மாகாணத்தின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெளியேற்ற உத்தரவு புதன்கிழமை (31) இரத்து செய்யப்பட்டது.

Related posts

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

PC கட்சி பல முக்கிய பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: புதிய கருத்துக் கணிப்பு!

Lankathas Pathmanathan

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

Leave a Comment