Alberta மாகாண தேர்தலில் United Conservative கட்சி வெற்றி பெற்றது.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற தேர்தலில் Danielle Smith தலைமையிலான United Conservative கட்சி வெற்றி பெற்றது.
இதன் மூலம் Danielle Smith தொடர்ந்தும் மாகாண முதல்வராக பதவி வகிக்கும் சந்தர்ப்பத்தை பெறுகின்றார்.
87 ஆசனங்களை கொண்ட மாகாண சபையில் 49 ஆசனங்களை United Conservative கட்சியும், 38 ஆசனங்களை புதிய ஜனநாயக கட்சியும் வெற்றிபெற்றன.
இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் United Conservative கட்சி Albertaவில் ஆட்சியமைக்கிறது.
இந்த தேர்தலின் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி Rachel Notley தலைமையிலும், United Conservative கட்சி Danielle Smith தலைமையிலும் இந்த தேர்தலை எதிர்கொண்டன.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் United Conservative கட்சி 63 ஆசனங்களை, புதிய ஜனநாயக கட்சி 24 ஆசனங்களை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது