Sturgeon நீர்வீழ்ச்சியில் விழுந்த 12 வயது Winnipeg சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சனிக்கிழமை (27) இந்த நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுவனின் உடல் இன்று அதிகாலை 1 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக Manitoba RCMP தெரிவித்தது.
மரணமடைந்த சிறுவன் Usaid Habib என அடையாளம் காணப்பட்டார்.
12 வயது சிறுவன் பாறைகளில் ஏறிக்கொண்டிருந்த போது தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு உதவுவதற்காக அருகில் இருந்தவர் முயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என RCMP தெரிவித்தது.