2020 ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
COVID தொற்று புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய ஐந்தாண்டு காலத்தின் சராசரி ஆண்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2020 இல் புதிய புற்றுநோய்களின் கண்டறிதல் விகிதம் 12.3 சதவீதம் குறைந்துள்ளது.
2020இல் ஆண்களிடையே புற்றுநோய் கண்டறிதல் 13.2 சதவீதம் குறைந்துள்ளது.
பெண்களில் புற்றுநோய் கண்டறிதல் 11.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.