COVID தொற்று கனடிய பொது சுகாதாரத்திற்கு பல ஆண்டுகளாக சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் COVID முடிவடையவில்லை என கனடாவின் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய COVID அவசர நிலையை வெள்ளிக்கிழமை (05) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த அறிவித்தலை ஒரு நல்ல அறிகுறி என அமைச்சர் கூறினார்.
ஆனாலும் COVID தொற்றின் தாக்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இது அவசர நிலையின் முடிவே தவிர அச்சுறுத்தலின் முடிவு அல்ல என அமைச்சர் Jean-Yves Duclos செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் COVID தொற்று கனடிய சுகாதாரப் பாதுகாப்பில் நீடித்த வடுக்களை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பெருந்தொற்று கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள முக்கிய சவால்களை அம்பலப்படுத்தியுள்ளது.
COVID தொற்று காரணமாக கனடாவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.