தேசியம்
செய்திகள்

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

கனடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த சீன தூதரை நாட்டில் இருந்து வெளியேற்றுவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளியேற்றுவது குறித்து வெளியுறவு அமைச்சர் Mélanie Joly உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என பிரதமர் வெள்ளிக்கிழமை (05) செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடாவில் இருந்து மற்றொரு நாட்டின் தூதரை வெளியேற்றுவது ஒரு பெரிய நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

அத்தகைய முடிவின் காரணமாக ஏற்படும் அனைத்து சாத்தியமான விளைவுகளையும் கருத்தில் கொள்வது அவசியம் எனவும் Justin Trudeau தெரிவித்தார்.

Hong Kongகில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களை சீனா குறிவைத்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் 2021 இல் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என இந்த வாரம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong கூறினார்.

ஆனாலும் இந்த தகவல் ஒருபோதும் அரசியல் வாதிகளிடம் பகிரப்படவில்லை என Justin Trudeau தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அச்சுறுத்தல் குறித்து தனக்குத் தெரியப்படுத்துவதற்காக, செயல்முறையை மாற்றுமாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிட்டதாகவும் பிரதமர் கூறுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விடயத்தில் விளக்கமளிக்க சீனத் தூதருக்கு கனடிய அரசாங்கம் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment