கனேடிய பூர்வீக தலைவர்கள் , ஆளுநர் நாயகம் ஆகியோரை இங்கிலாந்து மன்னர் Charles சந்தித்தார்.
கனடிய முதற்குடியினருக்கு இந்த தினம் வரலாற்றில் பிரதானமான நாள் என ஆளுநர் நாயகம் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதற்குடியினர் தலைவர்களுடனான இந்த சந்திப்பின் மூலம் சமரசத்திற்கு தனது உறுதிப்பாட்டை மன்னர் Charles வெளிப்படுத்தியுள்ளதாக ஆளுநர் நாயகம் கூறினார்.
இந்த சந்திப்பில் கனடிய ஆளுநர் நாயகம் தவிர, முதற்குடியினர் சட்டசபை தலைவர் Roseanne Archibald, Inuit Tapiriit Kanatam தலைவர் Natan Obed, Métis தேசிய சபை தலைவர் Cassidy Caron ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னரின் முடிசூட்டு விழா சனிக்கிழமை (16) நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு Buckingham அரண்மனையில் நிகழ்ந்தது.
கனடாவின் முதலாவது முதற்குடியினர் ஆளுநர் நாயகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.