தேசியம்
செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் மரணம் – ஆறு பேர் காயம்

Quebec மாகாணத்தின் Montreal புறநகர்ப் பகுதியான Lavalலில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் மாநகரப் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் இறந்தனர்.

புதன்கிழமை (08) காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மேலும் ஆறு குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 51 வயதான பேரூந்தின் ஓட்டுநர் Pierre Ny St-Amand கைது செய்யப்பட்டுள்ளதாக Quebec பொது பாதுகாப்பு அமைச்சர் Francois Bonnardel கூறினார்.

இவர் மீது கொலை, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இதனை ஒரு சோகமான நிகழ்வு என Quebec முதல்வர் Francois Legault தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக Quebec சட்டமன்றத்தின் புதன்கிழமை அமர்வின் முன்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அதிர்சியடைந்துள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்

Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh உட்பட பல அரசியல் தலைவர்கள் தமது அனுதாபங்களை வெளியிட்டனர்.

Related posts

Albertaவில் அதிகரிக்கும் தொற்று மரணங்கள்!

Gaya Raja

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment