தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு கனடாவின் உளவு துறைக்கு பிரதமர் Justin Trudeau உத்தரவிட்டுள்ளார்.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, அவரது குடும்பத்தினரை குறிவைக்க சீன அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை தொடர்ந்து இந்த உத்தரவை பிரதமர் விடுத்துள்ளார்.

ஆனாலும் சீனாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் தனக்கு தெரிவிக்கவில்லை என Michael Chong கூறுகிறார்.

Conservative கட்சியின் வெளியுறவு விமர்சகரான அவர், வெளிநாட்டு தலையீடு குறித்து கனடிய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையை கேள்வி எழுப்பியுள்ளார்.

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பம் சீன அரசால் குறிவைக்கப்படுகிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அறிந்து கொண்டதாக புதன்கிழமை (03) பிரதமர் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த விடயத்தை பிரதமர் கையாண்ட விதம் குறித்து Michael Chong கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

Lankathas Pathmanathan

CP ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja

Leave a Comment